Home உலகம் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட சீக்கிய இளைஞன் : வைரலாகும் காணொளி

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட சீக்கிய இளைஞன் : வைரலாகும் காணொளி

0

கனடாவில் (Canada) இந்திய மாணவரொருவர் கொடூரமாக சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் (India) பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த சம்பவம் பதிவாகியுள்ள சிசிரிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

உயிரிழந்த இளைஞர் 

உயிரிழந்த இளைஞரின் பெயர் ஹர்ஷன்தீப் சிங் (Harshandeep Singh) என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், கொலைக்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான முழுமையான பிண்ணனி இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, அந்நாட்டு காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து மயங்கிய நிலையில் மீட்கபட்ட இளைஞன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version