உலகளவில் செல்பி உயிரிழப்புகள் இந்தியாவிலேயே அதிகம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நிறுவனமான ‘தி பார்பர் லா ஃபிர்ம்’ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014 மார்ச் முதல் 2025 மே மாதம் வரையில் இந்தியாவில் மட்டும் சுமார் 271 விபத்துகள் செல்ஃபி எடுக்கும்போது ஏற்பட்டுள்ளது. அதில், 214 பேர் உயிரிழந்துள்ளனர். 57 பேர் காயமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த காலகட்டத்தில் செல்ஃபி மோகத்தால் ஏற்பட்ட விபரீதங்களில் 42.1% இந்தியாவில் நடந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆபத்து நிறைந்த பகுதிகளே உயிரிழப்பிற்கு காரணம்
மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்த பகுதி, தொடருந்து பாதை அல்லது மலை உச்சி, உயரமான கட்டிடம் என ஆபத்து நிறைந்த இடங்கள், இந்தியாவில் நிலவும் சமூக வலைதள மோகம் உள்ளிட்டவை இதற்கு காரணம் என ஆய்வை மேற்கொண்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.