Home இந்தியா நடுவானில் இயந்திர கோளாறு : மற்றுமொரு விமானமும் டில்லியில் அவசரமாக தரையிறக்கம்

நடுவானில் இயந்திர கோளாறு : மற்றுமொரு விமானமும் டில்லியில் அவசரமாக தரையிறக்கம்

0

இண்டிகோ(indigo) நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் நடுவானில் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை அடுத்து மீண்டும் டில்லியில்(delhi) அவசரமாக தரையிறக்கப்பட்டது.

தலைநகர் டில்லியில் இருந்து மணிப்பூரின் இம்பால் நகருக்கு சென்ற நிலையில் சிறிது நேரத்தில் விமானத்தில் சிறிய தொழில்நுட்ப கோளாறு இருப்பது தெரியவந்ததால், உடனடியாக டில்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

கோவாவுக்கு சென்ற விமானத்திலும் கோளாறு

 கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர், வழக்கமான நடைமுறைகள் பின்பற்றி, தேவையான பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் மீண்டும் இம்பாலுக்கு கிளம்பிச் சென்றதாக அந்த நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று டில்லியில் இருந்து கோவாவுக்கு சென்ற இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு கண்டறியப்பட்டு மும்பையில் தரையிறக்கப்பட்ட நிலையில் தற்போது மற்றொரு விமானத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

NO COMMENTS

Exit mobile version