Home இலங்கை சமூகம் யாழில் பிறந்து 45 நாட்களான சிசு பரிதாபமாக உயிரிழப்பு

யாழில் பிறந்து 45 நாட்களான சிசு பரிதாபமாக உயிரிழப்பு

0

யாழ்ப்பாணத்தில் பிறந்து 45 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. 

கடந்த 16ஆம் திகதி குழந்தைக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்
பெற்றோர் அன்றையதினம் 4:00 மணிக்கு சாவகச்சேரி ஆதர வைத்தியசாலைக்கு குழந்தையை
கொண்டு சென்றனர்.

இதனையடுத்து, மேலதிக சிகிச்சைகளுக்காக குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
நேற்று முன்தினம் (17.10.2024) முற்பகல் 11.00 மணியளவில் சேர்ப்பிக்கப்பட்டது.

மரண விசாரணைகள்

இருப்பினும், சிகிச்சை
பலனின்றி குறித்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இந்நிலையில், குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

அத்துடன், குழந்தையின் இறப்புக்கான காரணம்
கண்டுபிடிக்கப்படாத நிலையில், உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன.
  

Source: https://tamilwin.com/article/infant-passed-away-in-jaffna-1729286470

NO COMMENTS

Exit mobile version