விசாரணைகள் முடியும் வரை ஒருவரை நீண்ட காலத்திற்கு கைது செய்யலாம் அல்லது
தடுத்து வைக்கலாம் என்றாலும், இலங்கையின் தண்டனை விகிதம் இரண்டு சதவீதமாகவே
உள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன கூறியுள்ளார்.
இந்தநிலையில் விசாரணைகளின் இறுதியில், கைது செய்யப்பட்டவர்களில்
பெரும்பாலோரின் உரிமைகள் மீறப்பட்டதாக தீர்ப்புக்கள் வெளியாகின்றன என்று அவர்
குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தைக் குறிக்கும் வகையில் இடம்பெற்ற நிகழ்வில் அவர்
இந்தக்கருத்தை வெளியிட்டார்.
25 ஆண்டுகள் வரை தடுத்து வைத்திருந்தால்
இந்தியாவில் கைது செய்யப்படுவோரின் தண்டனை விகிதங்கள் 57–58 சதவீதமாகவும்,
ஜப்பானில் 98 சதவீதமாகவும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் இலங்கையில் 2 என்ற விகிதத்திலேயே தண்டனை வழங்கப்படுகிறது.
இதன் மூலம் புலனாய்வு அதிகாரிகள் வேறு இடங்களில் உருவாக்கப்பட்ட சட்டங்களை
வெறுமனே செயல்படுத்துகிறார்கள் என்பதை அறியமுடிகிறது என்றும் வஜித அபேவர்த்தன
குறிப்பிட்;டுள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, புதிய சர்வதேச நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இந்த நிறுவனங்கள் இன்றைய சூழலில் பொருத்தமானவையா என்று தெரியவில்லை.
விசாரணைகள் முடியும் வரை ஒருவரை கைது செய்யவோ அல்லது காவலில் வைக்கவோ
அனுமதிக்கப்படுவதாக இலங்கையின் அரசியலமைப்பு குறிப்பிடுகிறது.
இதனடிப்படையில் 25 ஆண்டுகள் வரை ஒருவரை தடுத்து வைத்திருந்தால், அது உரிமை
மீறலாகக் கருதப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர் இந்த நிலைமை
மாற்றப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
