Home இலங்கை சமூகம் அரச செலவில் விமானப்படை உலங்குவானூர்திகள்: தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

அரச செலவில் விமானப்படை உலங்குவானூர்திகள்: தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

0

தேர்தல் கூட்டங்கள் மற்றும் பிரசார நடவடிக்கைகளுக்காக பல்வேறு பகுதிகளுக்கு செல்ல அரச செலவில் விமானப்படை உலங்குவானூர்திகள் அல்லது விமானங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையகம் அனைத்து வேட்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்

அரச விமானங்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தினால் அதற்கு பணம் கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை

எவ்வாறாயினும், ஏனைய தேர்தல் அல்லாத உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கு விமானங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நபர்கள்  அரசாங்க விமானங்களைப் பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரச பேருந்துகள் மற்றும் தொடருந்துகளை தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தினால் அதற்கும் பணம் செலுத்தி ரசீதுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, அரசாங்க சொத்துக்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்துதல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version