Home இலங்கை அரசியல் முன்னாள் சபாநாயகரரின் வாகனம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

முன்னாள் சபாநாயகரரின் வாகனம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

0

சபுகஸ்கந்த, தெணிமல்ல பகுதியில் அண்மையில் விபத்துக்குள்ளான முன்னாள்
சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வலவின் ஜீப் ரக வாகனத்தின்
தடுப்பு (Brake) தொகுதி முறையாக பராமரிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

குறித்த வாகனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதைனையில், அதன் தடுப்பு தொகுதியில்
கோளாறு இருந்தமை கண்டறியப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை
அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

சட்ட நடவடிக்கை 

இதற்கமைய, குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக, வாகனத்தை முறையாக
பராமரிக்க தவறியமை தொடர்பிலும் எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட
மருத்துவ பரிசோதனை அறிக்கை இதுவரை காவல்துறையினருக்கு கிடைக்கவில்லை என்றும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவின் இரத்த மாதிரியொன்றும் அரசாங்க
இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் ஆலோசனையின் பேரிலேயே இந்த இரத்த மாதிரி ஒப்படைக்கப்பட்டதாக
காவல்துறை ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version