Home இலங்கை குற்றம் யாழ்.சாவகச்சேரியில் ஊசி மூலம் போதைப் பொருள் ஏற்றியவர் ஆபத்தான நிலையில்!

யாழ்.சாவகச்சேரியில் ஊசி மூலம் போதைப் பொருள் ஏற்றியவர் ஆபத்தான நிலையில்!

0

யாழ். தென்மராட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போதைப் பொருளை ஊசி மூலம் உடலில்
ஏற்றிய நிலையில் மயக்கமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த இளைஞன் போதைப் பொருளை ஊசி
மூலம் தொடர்ச்சியாக பாவிப்பவர் என தெரியவருகின்றது.

ஆபத்தான நிலை

இந்நிலையில் இளைஞன் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றிய நிலையில் திடீரென
மயக்கமடைந்துள்ளார்.

பின்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை
பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version