Home இலங்கை சமூகம் 2012 இல் மன்னார் நீதிமன்றத்தில் நடந்த அநியாயம் : அநுரவிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

2012 இல் மன்னார் நீதிமன்றத்தில் நடந்த அநியாயம் : அநுரவிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

0

2012 ஆம் ஆண்டு மன்னார் (Mannar) நீதிமன்றத்தில் நடந்த சம்பவம் குறித்த விசாரணைகளை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என சிரேஸ்ட ஊடகவியலாளரான ஜெ. ஸ்ரீரங்கா (J. Sriranga) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை வவுனியாவில் நேற்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் “நீதிபதி யூட்சன் நீதிபதியாக இருந்த போது அந்நீதிமன்றத்துக்கு கல் எறியப்பட்டது எனவும், ரிஷார்ட் பதியுதீனால் அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது என்றும் முறைப்பாடு செய்திருந்தார்.

இது தொடர்பில் உரிய முறையிலான விசாரனைகள் மேற்கொள்ளப்படவில்லை என கூறி பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கா நீதிமன்றத்தை மூடி உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் இணைந்து பகிஷ்கரிப்பினை மேற்கொண்டிருந்தனர்.

இதற்கு பிறகு, விசாரணைகள் நடாத்தப்பட்டதுடன் ரிஷார்ட் பதியுதீனுக்கு எதிரான வழக்கு அரசுக்கெதிரானது என தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்காவை வீட்டுக்கு அனுப்பினார்” என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/A5IrFsZmu_Y?start=2

NO COMMENTS

Exit mobile version