Home இலங்கை சமூகம் வெசாக் தினத்தை முன்னிட்டு தமிழர் பிரதேசங்களில் விடுவிக்கப்பட்ட கைதிகள் !

வெசாக் தினத்தை முன்னிட்டு தமிழர் பிரதேசங்களில் விடுவிக்கப்பட்ட கைதிகள் !

0

வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் (Jaffna) சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் 388 சிறைக் கைதிகள் இன்று (12) விடுதலை செய்யப்படுகின்றனர்.

சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படுகின்றனர்.

கைதிகள் விடுதலை 

இதன்படி, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைத்திருந்த இருந்து 20 கைதிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கைதிகளை யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் டி.ஐ.ஜெயவர்த்தன உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள் கைலாகு கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.  

மேலும், வவுனியா (Vavuniya) சிறைச்சாலையில் இருந்தும் ஏழு கைதிகள் விடுதலை
செய்யப்பட்டனர்.

சிறு குற்றங்களோடு சம்பந்தப்பட்டஏழு பேரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் பி. டபிள்யு.எச். மதுசங்க தலைமையில் கைதிகள்
விடுவிப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

🛑 you may like this..!

https://www.youtube.com/embed/gF5E4A5Lf4k

NO COMMENTS

Exit mobile version