Home இலங்கை சமூகம் சிறைக் கைதிகளை சந்திக்க வழங்கப்பட்டுள்ள விசேட சந்தர்ப்பம்

சிறைக் கைதிகளை சந்திக்க வழங்கப்பட்டுள்ள விசேட சந்தர்ப்பம்

0

சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு எதிர்வரும் 16ம் திகதி விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.

119ஆம் சிறைச்சாலை தினத்தை முன்னிட்டு இந்த விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த தினத்தில் கைதிகளின் உறவினர்கள் நண்பர்கள் அவர்களை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரப் பொருட்கள் 

மேலும் கைதிகளுக்கு உணவு மற்றும் சுகாதாரப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்க முடியும் எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சகல சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி கைதிகளை பார்வையிடுவதற்கான எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த சந்தர்ப்பம் வழங்கப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார். 

Source: https://tamilwin.com/article/inmates-get-special-open-visit-day-1720801761

NO COMMENTS

Exit mobile version