Home இலங்கை சமூகம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்

0

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முன்னைய புலனாய்வுத் தகவல்கள் தொடர்பில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய சிறிலங்கா அதிபரினால் நியமிக்கப்பட்ட குழுவை ஏற்றுக்கொள்ள முடியாது என கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி (Cyril Gamini) தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆயர் இல்லத்தில் நடைபெற்ற கத்தோலிக்க திருச்சபையின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குழுவின் முன் சாட்சியமளிக்க வேண்டியவர்கள் இன்னும் அந்தந்த பதவிகளில் இருப்பதால், சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணை நடைபெறுவது சந்தேகத்திற்குரிய விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் இலக்கு

எனவே மூன்று மாதங்களுக்குள் தேவையான சட்டவிதிகளை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உரிய அலுவலகம் மற்றும் விசாரணை அதிகாரியை நியமிக்க ஏற்பாடு செய்யுமாறு சிறிலங்கா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட சிபார்சுகள் எதுவும் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும், அதிபர் தேர்தலையோ அல்லது பொது தேர்தலையோ இலக்காகக் கொண்டு மக்களை ஏமாற்றும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என சந்தேகம் இருப்பதாகவும் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version