Home இலங்கை கல்வி வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்லவுள்ளவர்களுக்கு அமைச்சர் வழங்கியுள்ள அறிவிப்பு

வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்லவுள்ளவர்களுக்கு அமைச்சர் வழங்கியுள்ள அறிவிப்பு

0

வேலைவாய்ப்புக்காக தனியார் முகவர்களின் ஊடாக வெளிநாடு செல்லும்போது 1989 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி குறித்த முகவர் தொடர்பில் அறிந்து கொள்ள முடியும் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பங்குபற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர்.

இதற்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் விஜத ஹேரத் இதனைக் கூறியுள்ளார்.

வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிறுவனங்கள் மற்றும் கட்டணங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பணியகத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ள முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தவொரு தரப்பினரும் அங்கீகரிக்கப்பட்ட தொகையை விட அதிகமாகப் பெற்றுக்கொண்டால் அல்லது அனுமதிப்பத்திரம் இன்றி ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபட்டால் பணியகத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என அதிகாரிகளினால் இதன்போது தெரிவிக்கப்பட்டது. 

NO COMMENTS

Exit mobile version