பிள்ளையானின் கைது என்பது தமிழ் தேசியம் சார்ந்த ஒருமித்த நிலைப்பாட்டை உடைப்பதற்கான வியூகமாக இருப்பதாக நான் கருதுகின்றேன் என்று
பிரித்தானியாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்த தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கையின் புலனாய்வுப்பிரிவு தற்போது வளர்ச்சியடைந்துள்ளது, இந்த வளர்ச்சிதான் விடுதலைபுலிகள் அமைப்பை தோற்கடிக்கவும் செய்தது.
தற்போது அவர்கள் அரசியல் ரீதியாக தோற்கடிப்பு நடவடிக்கைகளை செய்கிறார்கள்.
அதற்கு தமிழ் மக்களின் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை கைது செய்ய தொடங்கியுள்ளார்கள்.
அதனுடைய ஒரு அங்கமாகதான் பிள்ளையான் மற்றும் கருணாவின் கூட்டணி அமைந்தது என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி
ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு…
