Home இலங்கை சமூகம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் யாழ்ப்பாணத்திற்கு அவசியம்: மணிவண்ணன் வலியுறுத்து!

சர்வதேச கிரிக்கெட் மைதானம் யாழ்ப்பாணத்திற்கு அவசியம்: மணிவண்ணன் வலியுறுத்து!

0

சர்வதேச கிரிக்கெட் மைதானம் யாழ்ப்பாணத்திற்கு அவசியம் என தமிழ் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று(26) ஊடக சந்திப்பை மேற்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அவ்வாறனதொரு மைதானம்
உருவாக்கப்பட்டால் தான் எமது மாவட்ட வீரர்களின் திறமைகள் சர்வதேச தரத்திற்கு
செல்லும்.

சர்வதேச மைதானம்

அதேபோன்று சர்வதேச மைதானம் அமைவதால் யாழ்.மாவட்டத்தின் பொருளாதார ஈட்டலும்
பன்மடங்கு அதிகரிக்கும்.

எந்த அபிவிருத்தி வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்ற கலாசாரம் எமது
மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

இது அவிருத்திகளையும் பொருளாதார ஈட்டல்களையும் எமது பிரதேசத்திலிருந்து
விடுபட்டு போவதற்கான சந்தர்ப்பத்தையே உருவாக்கும்.

வடக்கில் சர்வதேச மைதானம் உருவாகுவதை தென்னிலங்கை விரும்பாத நிலை இருந்து
வருகின்றது.

அதிலிருந்து அவர்கள் விடுபட்டு மைதானத்தை உருவாக்க நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டால் அதை நாம் வரவேற்போம்.

வலியுறுத்து

இதனூடாக பிரதேசத்தின் அபிவிருத்தியும் யாழ்.மாவட்டத்தின் பொருளாதார ஈட்டலும்
பன்மடங்கு அதிகரிக்கும்

அமையவுள்ள மைதானம்
சுற்றுச்சூழலுக்கு பாதகத்தை உருவாக்கும் என்ற கருத்து எந்தளவுக்கு உறுதியானது
என்று தெரியவில்லை.

அது குறித்து ஆராய்ந்து மைதானத்தை அமைப்பது
யாழ்ப்பாணத்துக்கு நன்மையாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version