Home இலங்கை சமூகம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையை கோரும் இலங்கை கத்தோலிக்க திருச்சபை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையை கோரும் இலங்கை கத்தோலிக்க திருச்சபை

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை கோரி, பல வெளிநாட்டு
அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் ஊடாக ஐக்கிய நாடுகளின் மனித
உரிமைகள் பேரவையில் முன்மொழிவை முன்வைக்க, இலங்கை கத்தோலிக்க திருச்சபை
திட்டமிட்டுள்ளது.

2019, ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் ஐந்தாவது ஆண்டு
நிறைவைக் குறிக்கும் வகையில், கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்;
இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த மற்றும் தற்போதைய அரசாங்கங்கள் ஐந்து வருடங்கள் நிறைவடைந்த போதிலும்,
தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சதி அல்லது அதற்கு மூளையாக செயல்பட்டவர்களை
வெளிப்படுத்தத் தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தருவதாக வாய்மொழியாக வழங்கிய
வாக்குறுதியை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிறைவேற்ற தவறிவிட்டார்
தற்போது தாம் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றின்;
எழுத்துப்பூர்வ உறுதிமொழிகள் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக கர்தினால்
குறிப்பிட்டுள்ளார்.

நீதியை எதிர்பார்க்க முடியுமா?

உயிர்த்த ஞாயிறு கலவரத்தின் போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவே தற்போது
நாட்டின் ஜனாதிபதியாக இருக்கிறார்
பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் கடமை தவறியதாக ஜனாதிபதி ஆணைக்குழுவினால்
கூறப்பட்ட கொழும்பு வடக்கு பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனே
தற்போது, பொலிஸ் மா அதிபராக செயற்படுகிறார்.

இந்திய புலனாய்வுப் பிரிவினர் முன்னெச்சரிக்கை விடுத்திருந்தும், படுகொலைகளைத்
தடுக்கத் தவறிய அப்போதைய தேசிய புலனாய்வுப்பிரிவின் பணிப்பாளர் நிலாந்த
ஜெயவர்தனவே இன்று பொலிஸ் துறையில் இரண்டாம் நிலை அதிகாரியாக உள்ளார்.

இந்தநிலையில் நீதியை எதிர்பார்க்க முடியுமா? என மல்கம் ரஞ்சித் கேள்வி
எழுப்பியுள்ளார். 

உலகின் சக்திவாய்ந்த இஸ்ரேலின் இரு விமான நிலையங்களுக்கு நேர்ந்த கதி

கனடாவில் அறிமுகமான புதிய வரி திட்டம்: மருத்துவர்கள் பாதிப்பு

NO COMMENTS

Exit mobile version