Home இலங்கை ரணிலின் கைதை தலைப்பு செய்தியாக்கிய சர்வதேச ஊடகங்கள்

ரணிலின் கைதை தலைப்பு செய்தியாக்கிய சர்வதேச ஊடகங்கள்

0

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கைது செய்யப்பட்டதை ஏராளமான சர்வதேச ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கவின் கைது சர்வதேச ரீதியில் பேசுபொருளாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

ரணில் விக்ரமசிங்க இன்று (22) காலை வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

நீதிமன்றில் முன்னிலை

இந்த நிலையில் நான்கரை மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார்.

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி, கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version