முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதுக்கு எந்த இராஜதந்திரிகளோ அல்லது இராஜதந்திர அமைப்புகளோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை ஊடக சந்திப்பில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு நபர்கள் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டிருப்பதைக் குறிப்பிட்ட அமைச்சர், அவை கவனத்தில் கொள்ள விடயங்கள் அல்ல என்றும் கூறியுள்ளார்.
சர்வதேச சமூகத்தன் கவனம்
இதன்படி, இந்த நாட்டில் சட்டம் சீராக செயல்படுத்தப்படுவதை சர்வதேச சமூகம் தற்போது கவனித்து வருவதாகவும் அமைச்சர் விஜித சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் சட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்று கடந்த காலங்களில் கூறப்பட்டாலும், இன்று அத்தகைய நிலைமை காணப்படவில்லை என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
