Home இலங்கை சமூகம் மலையக மார்க்கத்திலான தொடருந்து சேவை பாதிப்பு

மலையக மார்க்கத்திலான தொடருந்து சேவை பாதிப்பு

0

வட்டகொடை மற்றும் தலவாக்கலை தொடருந்து நிலையங்களுக்கு இடையே தொடருந்து ஒன்று தடம்புரண்டதன் காரணமாக மலையக மார்க்கத்திலான தொடருந்துச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து, இன்று(13) பகல் தடம்புரண்டதாக தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடருந்து இயக்கத்தில் தாமதம்

இதேவேளை, பாணந்துறை மற்றும் மொரட்டுவை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதால் கரையோர மார்க்கத்திலான தொடருந்துச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கரையோரப்பாதையில் தொடருந்து இயக்கத்தில் தாமதம் ஏற்படக்கூடுமென தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Source: https://tamilwin.com/article/interruption-of-train-services-on-mountain-routes-1718295299

NO COMMENTS

Exit mobile version