யாழ்ப்பாண மக்களிடம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது இவர்களது சுகாதார பழக்க வழக்கங்கள் என இந்திய பொலிஸ் அதிகாரி சி.சைலேந்திரா பாபு ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழில் பொது இடங்களில் சுகாதார கேடான விடயங்களை பார்க்க முடிவதில்லை.
வீதி விதிகளை அழகாக கடைபிடிக்கின்றார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒட்டுமொத்தத்தில் இதுவொரு பசுமை நிறைந்த அமைதியான இடம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
