Home முக்கியச் செய்திகள் யாழில் மதுபோதையில் அரச ஊழியரைத் தாக்கிய காவல்துறை உத்தியோகத்தர்

யாழில் மதுபோதையில் அரச ஊழியரைத் தாக்கிய காவல்துறை உத்தியோகத்தர்

0

யாழ்ப்பாணம் (Jaffna) – புங்குடுதீவில் மதுபோதையிலிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

புங்குடுதீவு – மடத்துவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள கடற்படை சோதனை சாவடியில் நேற்றிரவு (24) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலஞ்சம் கோரி தாக்குதல்

அதி உச்ச மதுபோதையில் காணப்பட்ட ஊர்காவற்துறை காவல் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் அவ்வழியே பயணித்த அரச உத்தியோகத்தர் மீது இலஞ்சம் கோரி தாக்குதல் நடாத்தியுள்ளாார்.

அத்துடன் குறித்த தாக்குதலை தடுக்காமல் கடற்படையினர் வேடிக்கை பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version