Home இலங்கை குற்றம் நுகேகொட நீதவான் நீதிமன்றில் காணாமல்போன கோப்பு தொடர்பில் விசாரணை

நுகேகொட நீதவான் நீதிமன்றில் காணாமல்போன கோப்பு தொடர்பில் விசாரணை

0

Courtesy: Sivaa Mayuri

கொழும்பின் புறநகர் – நுகேகொடையில் (Nugegoda) அமைந்துள்ள நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான கோப்பு (File) காணாமல் போனமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID ) விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஒரு பெண் அசிட் வீச்சுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான கோப்பே காணாமல் போயுள்ளது.

நீதிச்சேவைகள் ஆணைக்குழு

கோப்பு காணாமல் போனது தொடர்பாக நீதிமன்றத்தில் பணிபுரியும் பல அதிகாரிகளிடம், குற்றப்புலனாய்வுத்துறை விசாரணை நடத்தியது.

நுகேகொட நீதவான், நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு வழங்கிய அறிவித்தலின் அடிப்படையில் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது, நீதிமன்ற அதிகாரி ஒருவரால் ஏதோ வேலைக்காக எடுத்துச் செல்லப்பட்ட வழக்குப் கோப்பே காணாமல் போனமை தெரியவந்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version