Home இலங்கை குற்றம் பாரியளவிலான 300 ஊழல்-மோசடி சம்பவங்கள் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பம்

பாரியளவிலான 300 ஊழல்-மோசடி சம்பவங்கள் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பம்

0

கடந்த காலங்களில் கைவிடப்பட்டிருந்த பாரியளவிலான 300 ஊழல், மோசடி சம்பவங்கள் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஊழல் மற்றும் இலஞ்சம் தடுப்பு விசாரணை ஆணைக்குழு அதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

விசாரணைகள்

ஊழல் மற்றும் இலஞ்சம் தடுப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் ரங்க திசாநாயக்கவின் கருத்துப்படி கடந்த காலங்களில் குறித்த சம்பவங்கள் தொடர்பான கோப்புகள் கைவிடப்பட்டிருந்தன.

இவற்றில் கடந்த அரசாங்கங்களின் அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட மோசடி மற்றும் ஊழல் சம்பவங்களும் உள்ளடங்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த கோப்புகள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version