Home இலங்கை சமூகம் கஞ்சா பயிர்ச்செய்கையில் ஆர்வம் காட்டும் முதலீட்டாளர்கள்..!

கஞ்சா பயிர்ச்செய்கையில் ஆர்வம் காட்டும் முதலீட்டாளர்கள்..!

0

இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்தி வலயங்களில் கஞ்சா பயிர்ச்செய்கையை மேற்கொள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலரும் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கில் கஞ்சா பயிர்ச்செய்கையை மேற்கொள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளதாக முதலீட்டு அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

ஆர்வம் காட்டும் முதலீட்டாளர்கள்

ஹொங்கொங் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களே பெருமளவில் கஞ்சாப் பயிர்ச் செய்கை தொடர்பில் ஆர்வம் கொண்டுள்ளனர்.

அதேபோன்று உள்ளூர் முதலீட்டாளர்கள் பலரும் கஞ்சா பயிர்ச்செய்கை தொடர்பில் முதலீடுகளை மேற்கொள்ள விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை

இலங்கை முதலீட்டுச் சபையின் அதிகாரிகள் இது தொடர்பில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

எனினும் இதுவரை கஞ்சா பயிர்ச்செய்கை தொடர்பில் அரசாங்கத்தின் சம்மதம் கிடைக்கப்பெறவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version