2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஆரம்ப சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன.
இம்முறை பஞ்சாப் கிங்ஸ், ரொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய நான்கு அணிகள் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
அதன்படி, 2025 ஐபிஎல் தொடரின் இறுதி சுற்று போட்டிகள் நாளை (29) தொடங்க உள்ளன.
முதல் சுற்றின் இறுதிப் போட்டி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஆரம்ப சுற்றின் இறுதிப் போட்டியில் நேற்று (27) ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் களமிறங்கின.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 227 ஓட்டங்களை எடுத்தது.
அதன்பொது, மிட்செல் மார்ஷ் 67 ஓட்டங்களை எடுத்திருந்ததோடு, ஐபிஎல் முழுவதும் துடுப்பாட்டத்தில் பலவீனமாக விளையாடிய லக்னோ அணி தலைவர் ரிஷப் பந்த், நேற்றைய போட்டியில் தனது அபார திறமையை வெளிப்படுத்தி 61 பந்துகளில் 118 ஓட்டங்களை குவித்தார்.
பெங்களூரு அணியின் வெற்றி
அவரது இன்னிங்ஸில் 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் பதிவாகின.
அதனைதொடர்ந்து, ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக தனது முதல் போட்டியில் விளையாடிய நுவான் துஷாரா, 26 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
வெற்றிக்கான மிகப்பெரிய இலக்கை துரத்திய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 230 ஓட்டங்களை எடுத்து போட்டியில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
விராட் கோலி 54 ஓட்டங்களையும் கடைசி நிமிடத்தில் தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற மயங்க் அகர்வால் ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களும், ஜிதேஷ் சர்மா 33 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 85 ஒட்டங்களையும் எடுத்தார்.
இறுதிச் சுற்று
அதன்படி, இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்ப சுற்றின் 70 போட்டிகளின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முன்னணியில் இருந்த பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.
The league phase of #TATAIPL 2025 is now complete 🙌 🔢
Where did your favourite team finish? 🤔 pic.twitter.com/nQp6mtkxYo
— IndianPremierLeague (@IPL) May 27, 2025
நாளை முதல் இறுதிப் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன, அதே நேரத்தில் மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இறுதிப் போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
