Home இலங்கை குற்றம் சமூக ஊடக செயற்பாட்டாளர் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு

சமூக ஊடக செயற்பாட்டாளர் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு

0

சமூக ஊடக செயற்பாட்டாளர் சுதத்த திலகசிறி, “சிறி தலதா தரிசனத்திற்காக” வசதிகளை வழங்குவதாகக் கூறி பொதுமக்களிடமிருந்து பணம் திரட்டி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் பலர் இன்று (26) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளனர்.

எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள சிறி தலதா தரிசனத்திற்காக பக்தர்களுக்கு கழிவறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து பணம் திரட்டியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இராஜ் வீரரட்ன

மிகப்பெரிய நிதி மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மோசடியில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என முற்போக்கு இளைஞர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சமூக ஊடக செயற்பாட்டாளரும் இசைக் கலைஞருமான இராஜ் வீரரட்ன காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.

சுதத்த திலக்சிறியின் குரல் எனக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த தொலைபேசி உரையாடலில் சுதத்த ஜனாதிபதி உள்ளிட்ட சில முக்கியஸ்தர்களின் பெயர்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் இது தொடர்பில் இன்றைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவில் வாக்கு மூலமொன்றை அளித்ததாகவும் இராஜ் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version