Home முக்கியச் செய்திகள் இஸ்ரேலில் அலறத்தோடங்கிய சைரன்கள்! ஈரான் பாய்ச்சிய ஏவுகணைகள்

இஸ்ரேலில் அலறத்தோடங்கிய சைரன்கள்! ஈரான் பாய்ச்சிய ஏவுகணைகள்

0

புதிய இணைப்பு

ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு ஏவப்பட்ட சிறிய எண்ணிக்கையிலான ஏவுகணைகளை இஸ்ரேல் வான்பாதுகாப்பு படை  இடைமறித்தள்ளது.

இந்த தாக்குதல் காரணமாக மத்திய இஸ்ரேல் மற்றும் ஜெருசலேம் பகுதி முழுவதும் சைரன்கள் ஒலித்தன.

முதலாம் இணைப்பு

ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் நோக்கி ஏவியுள்ளதாக எனக் இஸ்ரேலிய பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

இதன் விளைவாக, இஸ்ரேலின் மையப்பகுதியில் சைரன்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

எதிர்வரும் நிமிடங்களில் மேலும் பல பகுதிகளில் சைரன் எச்சரிக்கைகள் ஒலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் ஏவுகணைகளை வானிலேயே அழிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையில், சைரன் ஒலிக்கும் அனைத்து பகுதிகளிலும் உள்ள குடிமக்கள் உடனடியாக குண்டு தாங்கும் அடைக்கலங்களில் (bomb shelters) புகுந்து, அடுத்த அறிவிப்பு வரைக்கும் அதிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version