Home உலகம் ஈரானில் அணு ஆயுதம் : சொந்த நாட்டின் உளவுத்துறையை கடித்து வைத்த டிரம்ப்

ஈரானில் அணு ஆயுதம் : சொந்த நாட்டின் உளவுத்துறையை கடித்து வைத்த டிரம்ப்

0

அமெரிக்காவின் (United States) தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட், ஈரான் (Iran) மற்றும் அணு ஆயுதம் தொடர்பில் தவறான கருத்தை கூறியதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்(20.06.2025) செய்தியாளர்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், “அமெரிக்க உளவுத்துறையே ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை என தெரிவித்துள்ளது. அதன் பின்னர் ஏன் நீங்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கின்றீர்கள்” என பத்திரிகையாளர் ஒருவர் ட்ரம்பிடம் கேள்வியெழுப்பியிருந்தார். 

அமெரிக்காவின் உளவுத்துறை

இதற்கு பதிலளித்த டிரம்ப், உளவுத்துறை தப்பு செய்துவிட்டது என்று கூறியுள்ளார். மேலும், உளவுத்துறை தலைவர் துல்சி கப்பார்ட்டின் செயல்பாட்டை, அவர் கடிந்துள்ளார். 

அதன் பின்னர் மேலும் சில கேள்விகளை பத்திரிகையாளர் கோட்டார். 


கேள்வி :
ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குகிறது என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது? உங்களுடைய உளவுத்துறையிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறுகிறார்களே?

ட்ரம்பின் பதில் : அப்படியா? என் உளவுத்துறை தவறு செய்திருக்கிறது. உங்களுக்கு இதை சொன்னது யார்?” என்று கேள்வி எழுப்பினார்.


பதிலுக்கு பத்திரிகையாளர் :
உங்கள் உளவுத்துறை தலைவர் துல்சி கப்பார்ட்தான் இதை சொன்னார்.


ட்ரம்பின் பதில் :
அவர் தவறாக கூறியிருக்கிறார்.ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் இறுதி கட்டத்தில் உள்ளது. உளவுத்துறையின் முடிவு இதற்கு எதிராக இருந்தாலும், அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை, என குறிப்பிட்டார். 

ஜனாதிபதி ட்ரம்ப்

இந்த சம்பாஷனைகள் தன்னை நோக்கி திரும்புவதை உணர்ந்த துல்சி, “ஈரான் சில வாரங்கள் அல்லது மாதங்களில் அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் இருக்கிறது என்று அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்துள்ளது.

அவர்கள் அதை செய்ய முடிவு செய்தால் உடனடியாக ஆயுதத்தை உருவாக்க முடியும். அது நடக்கக்கூடாது என்பதில் ஜனாதிபதி ட்ரம்ப் தெளிவாக இருக்கிறார், நானும் அதை ஒப்புக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 

ட்ரம்ப்பும், அமெரிக்க உளவுத்துறையும் என்னதான் இப்படி மாறி, மாறி சாடிக்கொண்தாலும், ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கிறது என்பதற்கு இப்போது வரை வலுவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

மேலும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர்,தனது நாட்டின் உளவுத்துறையை கடித்து வைத்திருப்பது சர்வதேச அளவில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version