Home உலகம் அணுதளங்கள் தாக்கம் உச்சத்தில்: பகிரங்கமாக ஒப்புகொண்ட ஈரான்

அணுதளங்கள் தாக்கம் உச்சத்தில்: பகிரங்கமாக ஒப்புகொண்ட ஈரான்

0

இஸ்ரேலுடனான (Israel) 12 நாள் போரில் ஈரானின் (Iran) அணுசக்தி தளங்களுக்கு ஏற்பட்ட சேதம் மிகத் தீவிரமானது என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விடயத்தை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் (United States) குறித்த தாக்குதலினால் ஏற்பட்ட தாக்கத்தை ஈரான் மதிப்பிடத் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விரிவான மதிப்பீடு 

இந்தநிலையில், சேதம் குறித்த விரிவான மதிப்பீடு ஈரானின் அணுசக்தி அமைப்பின் நிபுணர்களால் மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் அரச தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

அத்தோடு இப்போது, ​​இழப்பீடு கோருவது மற்றும் அவற்றை வழங்குவதன் அவசியம் பற்றிய விவாதம் நாட்டின் இராஜதந்திர நிகழ்ச்சி நிரலில் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நிபுணர் ஆய்வுகள்

இந்த சேதங்கள் கடுமையானவை, அத்தோடு நிபுணர் ஆய்வுகள் மற்றும் அரசியல் முடிவெடுப்பது ஒரே நேரத்தில் நடந்து வருகின்றன.

நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் அந்த நிலையங்களை அழித்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பலமுறை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version