இஸ்ரேலின் செயற்பாடுகள் தொடர்ந்தால், அடுத்த முறை 2000 ஏவுகணைகளை ஒரேநேரத்தில் ஏவி தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் அணுசக்தி திட்டங்கள் மற்றும் இராணுவத் தளபதிகளை குறிவைத்து இஸ்ரேல் நேற்று காலை ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற வான்வழித் தாக்குதலை நடத்தியது.
இதில் 78 பேர் உயிரிழந்ததாகவும், 320 படுகாயமடைந்ததாகவும் ஈரான் ஐநா பிரதிநிதி தெரிவித்தார்.
ஏவுகணை தாக்குதல்
ஈரானின் நடான்ஸ் அணுசக்தி செறிவூட்டும் வசதி, ஃபோர்டோ மற்றும் இஸ்ஃபஹான் அணு ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய தளங்கள் தாக்கப்பட்டது. நடான்ஸ் 60% யுரேனியத்தை வளப்படுத்தும் திறன் கொண்டது.
சேதமடைந்த அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு குறித்து ரஷியா கவலை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இதற்கு பதிலடியாக இன்று காலை வரை, ஈரான் “ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்” என்ற பெயரில் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ஏவுகணைகளை ஏவியது.
2000 ஏவுகணை
இதில் ஒருவர் கொல்லப்பட்டு, 34 பேர் காயமடைந்தனர். ரிஷோன் லெசியோனில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு 19 பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலை வரையிலும் இரு நாடுகளும் மாறி மாறி வான்வழித் தாக்குதல்களை நடத்தின.
இந்நிலையில், எதிர்காலத்தில் தாக்குதல் மிக பயங்கரமாக இருக்கும் எனவும் அடுத்த முறை 2000 ஏவுகணைகளை ஒரே நேரத்தில் ஏவி தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் தாக்குதலை அடுத்து, பாதுகாப்பு கருதி இஸ்ரேலின் சர்வதேச பென் குரியன் விமானநிலையம் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
