Home உலகம் ஈரான் – இஸ்ரேல் மோதல் – சுக்குநூறான பல்கலைக்கழகம் : அதிகரிக்கும் பதற்றம்

ஈரான் – இஸ்ரேல் மோதல் – சுக்குநூறான பல்கலைக்கழகம் : அதிகரிக்கும் பதற்றம்

0

ஈரான் (Iran) நடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள பல்கலைகழகம் ஒன்று தேசதமைடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல்-ஈரான் இடையேயான கடந்த சில தினங்களாக இடம்பெற்று வரும் கடும் மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது.

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் (13.06.2025) அதிகாலை கடும் தாக்குதல் நடத்தியது.

பாரிய அளவில் தேதம்

இந்த தாக்குதல்களில் 9 அணு விஞ்ஞானிகள், 3 ராணுவ தளபதிகள் உட்பட 78 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் மேற்கொண்டது.

இந்த தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள Weizmann Institute of Science பல்கலைகழகம் பாரிய அளவில் தேதம் அடைந்துள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் இன்று (15) அதிகாலை உறுதிப்படுத்தினர்.

மேலும் Weizmann பல்கலைகழகத்தில் உயிரிழப்புகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், பாதிக்கப்பட்ட கட்டிடத்திற்குள் மக்கள் சிக்கியிருக்கலாம் என்பது குறித்து அவசரகால குழுவினர் இன்னும் விசாரணை நடத்தி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

NO COMMENTS

Exit mobile version