Home உலகம் இஸ்ரேலுக்கு உதவினால் நிலைமை மோசமாகும் – எச்சரிக்கை விடுத்த ஈரான்

இஸ்ரேலுக்கு உதவினால் நிலைமை மோசமாகும் – எச்சரிக்கை விடுத்த ஈரான்

0

ஈரானுக்கு (Iran) எதிராக தாக்குதல் நடத்த, எந்தவொரு சூழலிலும், இஸ்ரேலுக்கு (Israel) உதவி செய்ய வேண்டாம்’ என அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரித்துள்ளது.

குறித்த எச்சரிக்கையானது இன்றையதினம் (12.10.2024) ஈரானின் மூத்த தலைவர் அயத்துல்லா அலி கமேனியினால் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பில் ஈரானின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளதாவது. லெபனான் (Lebanon), இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானில் ஹமாஸ் (Hamas) தலைவர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

அரபு நாடுகள்

இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு, மத்தியில் அரபு நாடுகள், இஸ்ரேலுக்கு உதவ வேண்டாம்.

அரபு நாடுகள் தங்களின் வான்வழி மற்றும் இராணுவ தளங்களை இஸ்ரேலிய தாக்குதலுக்கு பயன்படுத்த அனுமதித்தால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும். இஸ்ரேலுக்கு உதவினால் நிலைமை மோசமாகும். என்று அவர் கூறியுள்ளார்.

ஆயுதப்படை தாக்குதல்

இதேவேளை, லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடுகளின் மீது இஸ்ரேலிய ஆயுதப்படைகள் நடத்தும் தாக்குதல்களை கடுமையாக விமர்சித்து கண்டிப்பதாக ஸ்பெயின் (Spain) பிரதமர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம்(2023) அக்டோபரில் இருந்தே இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை ஸ்பெயின் துணிச்சலுடன் நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள ஸ்பெயின் பிரதமர், சர்வதேச நாடுகளும் துணிந்து முடிவெடுக்க வேண்டும் என்றும், மத்திய கிழக்கில் அமைதி திரும்ப அதுவே உறுதியான தீர்வு என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version