ஈரான் மீதான இஸ்ரேலின் வான்தாக்குதல் தொடர்பான செய்மதிப் புகைப்படங்களும், புதிய புதிய தகவல்களும் ஒரு பக்கம் வெளிவந்து கொண்டிருக்க, மத்திய கிழக்கைப் போர்மேகம் சுழ்ந்து கொண்டிருப்பதை உணர்த்தும் பல செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்து மனங்களைக் கிலிகொள்ள வைத்துக் கொண்டிருக்கின்றது.
‘இஸ்ரேல் மீது யாரும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத தாக்குதலை நடாத்துவோம்’ என்று ஈரான் தற்பொழுது கூற ஆரம்பித்திருக்கின்றது.
ஈரான் மீதான தாக்குதலுக்கு ஈராக் மற்றும் சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்கின்ற கோணத்தில் ஒரு அவசரத் தேடலை ஈரான் மேற்கொண்டு வருவதான செய்திகளும் சேர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்தப் பின்னணியில் கடந்த இரண்டு நாட்களாக காசாவிலும், லெபனானிலும் நடைபெற்று வருகின்ற சில சம்பவங்களை ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
https://www.youtube.com/embed/MF-0guRnmaM