ஈரானின் அணுத்துறையில் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தொடரும் நிலையில், அதனை மீட்டெடுக்கும் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அணுஆணையத் தலைவர் மொஹம்மட் எஸ்லாமி சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
அதன்போது, “தயாரிப்பு மற்றும் சேவை நடவடிக்கைகள் இடைநிறையாமல் தொடர்வதே தற்போதைய திட்டம்,” என எஸ்லாமி குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஈரான் தொடர்ந்து அணு ஆயுதங்களை உருவாக்கும் நோக்கம் இல்லை என மறுத்து வருகிறது.
இஸ்ரேலின் குற்றச்சாட்டு
எனினும், அது அமைதிக்கே ஏற்றபடியாக இல்லாத அளவுக்கு யுரேனியத்தை செறிவூட்டி, சர்வதேச ஆய்வாளர்களின் பார்வையைத் தடுக்க முயற்சி செய்ததாகவும், ஏவுகணை திறன்களை விரிவாக்கியிருந்ததாகவும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த நிலையில், மொஹம்மட் எஸ்லாமியின் கருத்துகள் வெளியாகும் நேரத்தில், ஈரான் இஸ்ரேலுடன் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் ஒன்றை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
