Home சினிமா 40 வயது நடிகருக்கு ஜோடியான மமிதா பைஜூ.. வெளிவந்த ‘இரண்டு உலகம்’ படத்தின் First லுக்

40 வயது நடிகருக்கு ஜோடியான மமிதா பைஜூ.. வெளிவந்த ‘இரண்டு உலகம்’ படத்தின் First லுக்

0

மமிதா பைஜூ

மலையாளத்தில் பிரேமலு படத்தின் மூலம் சென்சேஷனல் நாயகியாக மாறிய நடிகை மமிதா பைஜூ ரெபல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தில் இணைந்தார். இப்படத்தில் விஜய்யுடன் இவர் இணைந்து நடித்துள்ளதை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

பல கோடி லாபம் கொடுத்த டிராகன் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ பாருங்க

இரண்டு உலகம்

இந்த நிலையில், மமிதா பைஜூவின் மூன்றாவது தமிழ் திரைப்படம் விஷ்ணு விஷாலுடன் என தொடர்ந்து தகவல் வெளிவந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆம், இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இரண்டு வானம் எனும் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் First லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர். மேலும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க திபு நின்னன் தாமஸ் இசையமைக்கிறார்.

முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஷ்ணு விஷால் – ராம் குமார் கூட்டணி இரண்டு வானம் படத்தில் இணைந்துள்ளனர். கண்டிப்பாக இது அவர்களுக்கு ஹாட்ரிக் வெற்றியை தேடி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version