முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலையில் வைத்திய நிர்வாகம் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த வைத்தியசாலையை அண்டிய வீதியோரத்தில் பாடசாலை முடிந்தவுடன் மகளை ஏற்றி வந்த தந்தையும் மற்றும் மகளும் தெருவில் நின்ற நாய் ஒன்றுடன் மோதுண்டு இருவரும் காயங்களுடன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
குறித்த நேரத்தில் கடமையில் இருந்த தாதியர்கள் வைத்தியர் இல்லை என தெரிவித்துள்ளதுடன் ஒரு மணி நேரம் காத்திருந்தும் அவர்கள் காயத்துக்கு மருந்து கட்டாமலும் அத்தோடு அவர்களை உள்ளேயும் எடுக்காமல் காத்திருக்க வைத்துவிட்டு கடமை பொறுப்புணர்வு இன்றி செயல்பட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு குறைபாடுகள்
இந்தநிலையில், பாடசாலை முடிந்து வந்த மகளும் தந்தையும் மிகவும் மன வருத்தத்துடன் வைத்தியசாலைக்கு வெளியில் காத்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வைத்தியசாலையில் இருந்த தாதியர்களுடைய இந்த செயல்பாட்டினால் அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதுடன் அண்மைக்காலமாக வடமாகாணத்தின் சுகாதாரத் துறையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/9IhEvNTV0Hc?start=79