பேருந்தொன்று பயணித்துக்கொண்டிருந்து போது பயணியொருவருக்கும் சாரதிக்கும் இடையில் இடம்பெற்ற முரண்பாடு தொடர்பிலான காணொளியொன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
காணொளியில் குறித்த பயணி சாரதியின் கவனயீனம் தொடர்பில் கேள்வி கேட்கையில் அவர் தொலைபேசியை பார்த்தப்படி பயணியை கடுமையாக திட்டுகின்றார்
பேருந்து நடத்துனரும் பயணியை திட்டும் விமதாக குறித்த காணொளியுள்ளது.
நாட்டில் அதிகளவான மக்கள் பொதுப்போக்குவரத்தையே நம்பி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அண்மைக்காலமாக சாரதிகளின் கவனயீனம் காரணமாக பெறுமதியான பல உயிர்கள் பல்வேறு பகுதிகளில் பலியாகியுள்ள நிலையில் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
