ஹிந்தி நடிகை மலைக்கா அரோரா கடந்த சில வருடங்களாக நடிகர் அர்ஜுன் கபூர் உடன் காதலில் இருந்த நிலையில், அவர்களுக்கு இடையில் இருக்கும் வயது வித்தியாசம் பற்றி அதிகம் விமர்சிக்கப்பட்டது.
அதன்பின் அவர்கள் பிரேக்அப் செய்து பிரிந்துவிட்டனர். இந்நிலையில் மலைக்கா தற்போது புதிதாக ஒருவருடன் டேட்டிங்கில் இருப்பதாக செய்தி பரவி வருகிறது.
புது காதலர் இவரா?
ஹர்ஷ் மேத்தா என்ற நபர் உடன் அவர் ஒன்றாக வெளியில் செல்லும் போட்டோக்களும் வைரல் ஆகி வருகிறது. அவர்கள் ஒன்றாக ஒரு கான்சர்ட்டில் கலந்துகொண்ட நிலையில் தற்போது இருவரும் ஒன்றாக ஏர்போர்ட் வந்திருக்கின்றனர்.
இருவரும் ஒரே காரில் ஏறி சென்று வீடியோ வைரலான நிலையில், அவர் தான் மலைக்காவின் புது காதலரா என கிசுகிசு பரவி வருகிறது.
