மீனாட்சி சவுத்ரி
நடிகை மீனாட்சி சவுத்ரி தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
இளசுகளை கவர்ந்த நடிகைகளில் ஒருவராக இருக்கும் அவரை பற்றி பல்வேறு கிசுகிசுக்களும் அடிக்கடி பரவி வருகிறது.
ஹீரோ உடன் காதலா?
இந்நிலையில் மீனாட்சி சவுத்ரி தெலுங்கில் ஒரு நடிகரை காதலித்து வருவதாக கிசுகிசு பரவி வருகிறது.
நாகார்ஜூனா குடும்ப உறவினரும், நடிகருமான சுஷாந்த் உடன் தான் அவர் காதலில் இருப்பதாக மீண்டும் கிசுகிசு பரவி வருகிறது.
ஆனால் எங்களுக்குள் காதல் இல்லை என நடிகை தரப்பு விளக்கம் கொடுத்து இருக்கிறது.
இதற்க்கு முன் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மீனாட்சி தன்னை பற்றி மாதம் ஒரு கிசுகிசு பரப்புகிறார்கள் என கோபமாக பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
