Home சினிமா நாகார்ஜூனா குடும்ப மருமகள் ஆகிறாரா GOAT ஹீரோயின் மீனாட்சி சவுத்ரி?

நாகார்ஜூனா குடும்ப மருமகள் ஆகிறாரா GOAT ஹீரோயின் மீனாட்சி சவுத்ரி?

0

நடிகை மீனாட்சி சவுத்ரி தற்போது வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் GOAT படத்தில் விஜய் உடன் அவர் நடித்து இருந்தார்.

மேலும் துல்கர் சல்மான் உடன் அவர் நடித்த லக்கி பாஸ்கர் படமும் 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது.

இந்நிலையில் நடிகை மீனாட்சி சவுத்ரிக்கு திருமணம் என ஒரு தகவல் பரவி வருகிறது.

அக்கினேனி குடும்ப மருமகள் ஆகிறாரா?

நடிகர் நாகர்ஜுனாவின் சகோதரி மகன் சுஷாந்த் அனுமோல் உடன் தான் மீனாட்சி சவுத்ரி திருமணம் நடைபெற இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக தெலுங்கு மீடியாவில் செய்து வந்தது.

ஆனால் அந்த செய்தி சுத்த பொய் என மீனாட்சி சவுத்ரி பிரெஸ் மீட்டில் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

‘எதாவது நடப்பதாக இருந்தாலே நானே அறிவிப்பேன். அது தான் உண்மை. நான் அறிவிக்காதது எதையும் நம்பாதீங்க, அது உண்மை இல்லை’ என கூறி இருக்கிறார்.

மேலும் அவர் சிங்கிளா என பத்ரிக்கையாளர்கள் கேட்டதற்கு “நான் சிங்கிள் தான், ஆனால் mingle ஆக விரும்பவில்லை” என அவர் கூறியுள்ளார்.
 

NO COMMENTS

Exit mobile version