Home இலங்கை குற்றம் செவ்வந்தியுடன் ராஜபக்சர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை..! சமல் தகவல்

செவ்வந்தியுடன் ராஜபக்சர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை..! சமல் தகவல்

0

“பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சூத்திரதாரி இஷாரா
செவ்வந்தியை வெளிநாட்டில் வைத்து இலங்கைபொலிஸ் படை கைது செய்ததை நாம்
வரவேற்கின்றோம்.

இந்த இஷாரா செவ்வந்தியுடன் ராஜபக்சர்களுக்கு எவ்வித தொடர்பும்
இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

பொலிஸார் தீவிர விசாரணை

“இஷாரா செவ்வந்தியிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்த வேண்டும். பாதாள உலகக்
குழுவினர் தமது விருப்பப்படி இஷாரா செவ்வந்தியை இயக்கியுள்ளனர். அவரைச் சும்மா
விட முடியாது. அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்.

இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரினதும் பெயர்
விவரங்களையும் அரசு வெளியிட்டு அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க
வேண்டும்.

இஷாரா செவ்வந்தியுடன் ராஜபக்சர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. சமூக
ஊடகங்களில் வெளிவரும் போலித் தகவல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025

NO COMMENTS

Exit mobile version