Home இலங்கை சமூகம் யாழ். அராலியில் செவ்வந்தி தப்பிச் சென்ற படகு..! யார் இந்த ஆனந்தன் – கசிந்த புகைப்படம்

யாழ். அராலியில் செவ்வந்தி தப்பிச் சென்ற படகு..! யார் இந்த ஆனந்தன் – கசிந்த புகைப்படம்

0

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை யாழில் பாதுகாப்பாக தங்க வைத்து இந்தியா (India) அழைத்துச் சென்ற பின்னணியில் செயற்பட்ட பலர் தற்போது தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து, இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல பயன்படுத்திய படகு, யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது. 

நாட்டையே அதிர வைத்த இந்த குற்றப் பின்னணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் முக்கிய பங்காற்றி உள்ளமை இலங்கையில்  மட்டுமின்றி புலம்பெயர் நாடுகளிலும் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் விசாரணைகளில் இன்னும் பலர் யாழ்ப்பாணத்தில் சிக்கக்கூடும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனந்தனின் கைதை தொடர்ந்து அல்லைப்பிட்டியைச் சேர்ந்த இருவர் தலைமறைவாகி உள்ளதுடன் அவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட ஆனந்தன் என்பவர் யார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த ஆனந்தன் யார், அவரின் பின்னணி என்ன?  இஷாரா கடத்தப்பட்டது எப்படி? போன்ற விடயங்களை விரிவாக ஆராய்கின்றது இன்றைய நிகழ்ச்சி

https://www.youtube.com/embed/92kW3vNVauw

NO COMMENTS

Exit mobile version