Home இலங்கை குற்றம் குற்றவாளிகள் சுட்டு கொல்லப்படுவதன் பின்னணி.. வடக்கில் இயங்கி வந்த போதைப்பொருள் வர்த்தக வலையமைப்பு!

குற்றவாளிகள் சுட்டு கொல்லப்படுவதன் பின்னணி.. வடக்கில் இயங்கி வந்த போதைப்பொருள் வர்த்தக வலையமைப்பு!

0

புதுக்கோட்டை நீதிமன்றில் சுட்டுக் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் பிரதான சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டு அண்மையில் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

இதனை தொடர்ந்து, அவரிடம் புலனாய்வாளர்கள் மேற்கொண்ட சோதனைகளில் பல்வேறு ஆதாரங்கள் வெளிக் கொணரப்பட்டன.

அத்துடன், யாழ்ப்பாணத்திலிருந்து தப்பி இந்தியாவுக்கு செவ்வந்தி சென்றமை தொடர்பிலும் பல தகவல்கள் வெளியாகின.

அதன்போது, செவ்வந்தி தப்பிச் செல்வதற்காக உதவிய நபர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் வடக்கில் இடம்பெற்று வரும் பல்வேறுபட்ட குற்றச்செயல்கள் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சி,    

NO COMMENTS

Exit mobile version