Home இலங்கை குற்றம் தேடப்படும் இஷார செவ்வந்தி தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்

தேடப்படும் இஷார செவ்வந்தி தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்

0

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இஷார செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றமைக்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் பிரிவு முறையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

நேற்று இரவு ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அமைச்சர் ஆனந்த விஜேபால இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபர்கள்

“எங்களுக்குக் கிடைத்த தகவலுக்கமைய, அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாகத் தெரியவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக அனைத்து தகவல்களும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மூலம் வெளியானதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version