Home உலகம் ஈரான் தெற்கில் வெடித்தது போர்: திடீரென இஸ்ரேல் நடத்திய சரமாரி தாக்குதல்

ஈரான் தெற்கில் வெடித்தது போர்: திடீரென இஸ்ரேல் நடத்திய சரமாரி தாக்குதல்

0

சற்று முன்னர் ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, ஈரானின் தெற்கு நகரமான பந்தர் அப்பாஸ் மீது தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல், ஒரு ஆயுத கிடங்கு மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) மத்திய ஈரானில் உள்ள ஈரானிய ஆயுதப் படைகளுக்குச் சொந்தமான போர் விமானங்கள் மற்றும் இராணுவ உள்கட்டமைப்பு ஆகியவற்றையும் குறிவைப்பதாக தெரிவித்திருந்தது.  

NO COMMENTS

Exit mobile version