Home முக்கியச் செய்திகள் யாழில் துயர சம்பவம் – மின்தூக்கியிலிருந்து விழுந்து இளைஞன் உயிரிழப்பு

யாழில் துயர சம்பவம் – மின்தூக்கியிலிருந்து விழுந்து இளைஞன் உயிரிழப்பு

0

யாழில் (Jaffna) ஹோட்டலில் மின்தூக்கியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து யாழ். காவல்துறை பிரிவிற்குட்பட்ட பண்ணை பகுதியில் நேற்று (21) இரவு நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அச்செழு வடக்கு நீர்வேலியைச் சேர்ந்த
19 வயதுடைய வைரவநாதன் டிலக்க்ஷன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாதுகாப்பற்ற மின்தூக்கி

உயிரிழந்தவர் ஹோட்டலின் ஊழியர் என்றும், பொருட்களை கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பற்ற மின்தூக்கியில் பயணித்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.youtube.com/embed/mevP0DZbhIQ

NO COMMENTS

Exit mobile version