Home உலகம் ஐநா பொதுச் செயலாளருக்கு தடைவிதித்தது இஸ்ரேல்

ஐநா பொதுச் செயலாளருக்கு தடைவிதித்தது இஸ்ரேல்

0

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்(ntonio Guterres) இஸ்ரேல்(israel) நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

இஸ்ரேல் மண்ணில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் காலடி எடுத்து வைக்க தகுதியற்றவர்.

வரலாற்றின் ஒரு கறையாக நினைவு கூரப்படுவார்

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை உலக நாடுகள் கண்டித்தன. இதனை செய்யாமல் மௌனம் காக்கும் யாருக்கும் இஸ்ரேல் மண்ணில் கால் வைக்க தகுதி கிடையாது.

ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி மற்றும் தற்போது ஈரானின் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நபர் இஸ்ரேல் வரலாற்றின் ஒரு கறையாக நினைவு கூரப்படுவார் என தெரிவித்தார்.

ஈரானின் தாக்குதல்

 இஸ்ரேல் மீது ஈரான் 200-க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதை ஐ.நா பொதுச் செயலாளர் கண்டிக்காதமை இஸ்ரேலை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version