Home உலகம் நூலிழையில் தப்பிய கமேனி: அமெரிக்க அனுமதியே தேவையில்லை.! ஆக்ரோஷத்தில் இஸ்ரேல்

நூலிழையில் தப்பிய கமேனி: அமெரிக்க அனுமதியே தேவையில்லை.! ஆக்ரோஷத்தில் இஸ்ரேல்

0

ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியை (Ali Khamenei) கொலை செய்வதற்கு அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் (Israel Katz) தெரிவித்துள்ளார்.

12 நாள் போரின் போது ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால் கமேனியை நிச்சம் கொன்றிருப்போம் என அவர் கூறியுள்ளார்.

போர் நடைபெற்ற காலத்தில் கமேனியை தேடும் பணியில் இஸ்ரேலின் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டதாக அந்நாட்டு ஊடகமொன்றில் நேற்று பேசும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

கமேனி மீதான தாக்குதல் 

ஆனால் கமேனி இது குறித்து முன்கூட்டியே தெரிந்துகொண்டதாகவும், அதனால் தான் மிகவும் ஆழமான பதுங்குகுழியில் அவர் ஒளிந்ததாகவும் கட்ஸ் கூறியுள்ளார்.

இதேவேளை, அவர் தனது முக்கிய ராணுவ அதிகாரிகளுடன் உள்ள தொடர்புகளை முற்றிலுமாக துண்டித்துவிட்டதாகவும், இதனால் அவரை குறிவைத்து தாக்குவது இயலாத ஒன்றாகவே அமைந்ததாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கைவிடப்படப்பட்ட முயற்சி

இந்த நிலையில், அதே நாளில் மற்றுமொரு சனலுக்கு வழங்கிய நேர்காணலில், கமேனியை கொல்வதற்கான முயற்சிகள் தற்போது கைவிடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கட்ஸ் கூறியுள்ளார்.

அத்தோடு, தாக்குதலுக்குப் பிறகு ஈரான் அதன் அணுசக்தி நிலையங்களை மீண்டும் புதுப்பிக்கும் நிலையில் இருக்கும் என்று தான் நினைக்கவில்லை என அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version