Home உலகம் அதிகரித்துள்ள போர்ப்பதற்றம்: லெபனானிலிருந்து பொதுமக்களை வெளியேறுமாறு உத்தரவு

அதிகரித்துள்ள போர்ப்பதற்றம்: லெபனானிலிருந்து பொதுமக்களை வெளியேறுமாறு உத்தரவு

0

லெபனான் (Lebanon) தலைநகர் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல் (Israel) , பொதுமக்களை மொத்தமாக வெளியேற உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே, லெபனானின் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் நேற்றுமுன்தினமும் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் 100 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளியேறுமாறு உத்தரவு

இதனிடையே, லெபனான் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவது மேலும் தாமதமடையுமென அந்த நாட்டு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

லெபனானில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதன்படி பாடசாலைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தனியார் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் நிலைமைகளை கருத்திற் கொண்டு நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படலாம் எனவும் லெபனான் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Source: https://ibctamil.com/article/israel-on-high-alert-amid-gaza-clashes-1728256528

NO COMMENTS

Exit mobile version