Home அமெரிக்கா ட்ரம்பை சந்தித்த இஸ்ரேலிய பிரதமர்

ட்ரம்பை சந்தித்த இஸ்ரேலிய பிரதமர்

0

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு இன்றையதினம்(07.04.2025) அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

ஹமாஸுடனான பலவீனமான போர்நிறுத்தம் முறிந்ததைத் தொடர்ந்து, காஸா போர் மற்றும் பணயக்கைதிகள் திரும்புவது குறித்து இருவரும் விவாதிக்க உள்ளனர்.

முன்வைக்கப்படவுள்ள கோரிக்கை

அத்துடன், இஸ்ரேலுக்கு டிரம்ப் விதித்துள்ள 17% வரிகளைக் குறைப்பது தொடர்பில் நெதன்யாகு, ட்ரம்பிடம் கோரிக்கை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த வாரம் ட்ரம்பின் கட்டண அறிவிப்புக்குப் பிறகு அமெரிக்காவிற்கு வந்த முதல் உலகத் தலைவர் நெதன்யாகு என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version